பெண்ணாக இருந்து ஆணாக மாறிய IRS அதிகாரி - அமைச்சகத்திடம் வைத்து கோரிக்கை?

Government Of India India
By Karthick Jul 11, 2024 10:46 AM GMT
Report

வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக, அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் தனது பெயரையும் பாலினத்தையும் மாற்றிக்கொள்ள இந்திய வருவாய் சேவை (IRS) மூத்த அதிகாரியின் கோரிக்கையை நிதி அமைச்சகம் அனுமதித்துள்ளது.

இந்திய சிவில் சர்வீசஸில் இப்படி நடப்பது இதுவே முதல் முறையாகும்.

ஹைதராபாத்தில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (செஸ்டாட்) Customs Excise & Service Tax Appellate Tribunal (CESTAT), தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்ட 35 வயதான எம். அனுசுயா இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

Indian Revenue Service

அவர் தனது பெயரை எம் அனுகதிர் சூர்யா என்றும், தனது பாலினத்தை பெண்ணிலிருந்து ஆணாகவும் மாற்றும்படி கேட்டார். இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் அறிக்கையில், எம்.அனுசுயா கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. இனிமேல், அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் அந்த அதிகாரி 'மிஸ்டர் எம் அனுகதிர் சூர்யா' என்று அங்கீகரிக்கப்படுவார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை; முகமூடியுடன் வந்த 15 பேர் - வெளியான பரபரப்பு தகவல்

ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை; முகமூடியுடன் வந்த 15 பேர் - வெளியான பரபரப்பு தகவல்

அவரது LinkedIn profile படி, சூர்யா டிசம்பர் 2013 இல் சென்னையில் உதவி ஆணையராக தனது பணியை தொடங்கினார். 2018 இல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். அவர் கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் தனது தற்போதைய பதவியில் சேர்ந்தார்.

Indian Revenue Service officer changes gender for female to male

சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த அவர், 2023 இல் போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனம் பல்கலைக்கழகத்தில் சைபர் லா மற்றும் சைபர் தடயவியல் துறையில் பிஜி டிப்ளமோ முடித்தார்.