சிக்கன் பிரியாணியில் இரும்பு கம்பி.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள் : வைரலாகும் புகைப்படம்
பாண்டிச்சேரியில் பிரபலமான பிரியாணி கடையில் சிக்கன் பிரியாணியில் இரும்பு கம்பி இருந்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரியாணியில் இரும்பு கம்பி
பாண்டிச்சேரியில் 45 அடி சாலையில் பிரபலமான பிரியாணி கடை உள்ளது , இங்கு தட்டாஞ்சாவடியை சேர்ந்த மைக்கேல் என்பவர் பிரியாணி வாங்கியுள்ளார்.பின்பு அதனை தனது வீட்டுக்கு சென்று பிரித்து பார்த்த போது அதில் பாத்திரம் கழுவும் ஸ்கிரப் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடைக்கு சென்று உரிமையாளரிடம் முறையிட்ட நிகழ்வு தற்போது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
அதிர்ச்சி புகைப்படம்
அந்த வீடியோவில் மைக்கேல் கூறுகையில், பிரியாணியில் கம்பி கிடந்ததை தெரிவித்த போது கடை நிர்வாகம் முதலில் மறுத்தனர். பின்னர் சாதாரணமாக மன்னித்து விடுங்கள் என கூறுகின்றனர். கம்பி வயிற்றுக்குள் சென்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பிரியாணி கடை பொறுப்பேற்குமா? பிரியாணி சாப்பிடும்போது என்ன உள்ளது? என பார்த்து சாப்பிடுங்கள் என்று கூறிய மைக்கேல்
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளிப்பேன் என்றார். ஏற்கனவே சுல்தான் பேட்டையில் தரமற்ற உணவு விநியோகம் செய்வதாக வெளியான வீடியோவை தொடர்ந்து, பிரியாணியில் இரும்பு கம்பி கிடக்கும் வீடியோ பாண்டிச்சேரி பகுதியில் அதிர்ச்சியினையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.