கோடிக்கணக்கானோர் சுவாசிக்க உதவிய கண்டுபிடிப்பு - இரும்பு நுரையீரல் பற்றி தெரியுமா?

United States of America World
By Jiyath Mar 19, 2024 07:53 AM GMT
Report

இரும்பு நுரையீரல் பெக்டோரல் தசைகள் நிரந்தரமாக செயலிழந்த நோயாளிகளுக்கு உயிர்வாழ்வதற்கான திறவுகோலாக இருந்தது.

இரும்பு நுரையீரல்

உலகம் முழுவதும் ஏற்பட்ட போலியோ தொற்றுக்கு 1955-ம் ஆண்டு வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதுவரை இரும்பு நுரையீரல் தான் சிகிச்சையில் முக்கிய வழியாக இருந்தது. இதனை கண்டுபிடித்தவர் பிலிப் ட்ரிங்கர் ஆவார்.

கோடிக்கணக்கானோர் சுவாசிக்க உதவிய கண்டுபிடிப்பு - இரும்பு நுரையீரல் பற்றி தெரியுமா? | Iron Lung A Great Discovery

மேலும், இது அதிநவீன தொழில்நுட்பமாக அப்போது கருதப்பட்டது. செயற்கை சுவாசத்தின் இந்த வடிவம் எக்ஸ்டெர்னல் நெகட்டிவ் பிரஷர் வெண்டிலேஷன் (EPPV) என்று அழைக்கப்படுகிறது.

இந்த இரும்பு நுரையீரல் பெக்டோரல் தசைகள் நிரந்தரமாக செயலிழந்த நோயாளிகளுக்கு உயிர்வாழ்வதற்கான திறவுகோலாக இருந்தது. 295 கிலோ வரை எடை கொண்ட இந்த இரும்பு நுரையீரல் என்பது ஒரு ராட்சத, காற்று புகாத உலோக உருளை ஆகும்.

போர்வை, கண்ணாடி, மரக்கட்டைகள் சாப்பிடும் 3 வயது குழந்தை - வேண்டுகோள் விடுத்த தாய்!

போர்வை, கண்ணாடி, மரக்கட்டைகள் சாப்பிடும் 3 வயது குழந்தை - வேண்டுகோள் விடுத்த தாய்!

சுவாசிக்க உதவும்

ஒரு பெல்லோஸ் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இதற்குள் நோயாளிகள் கழுத்து வரை செல்ல வேண்டும். ஒரு பம்புடன் இணைக்கப்பட்டிருக்கும் பெல்லோஸ், பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து காற்றைச் சுழலச்செய்யும்.

கோடிக்கணக்கானோர் சுவாசிக்க உதவிய கண்டுபிடிப்பு - இரும்பு நுரையீரல் பற்றி தெரியுமா? | Iron Lung A Great Discovery

நோயாளிகளின் நுரையீரலுக்குள் காற்றைத் தள்ளுவதன் மூலம் அவர்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவும். இந்த உருளை போன்ற சாதனத்தில் நோயாளிகள் சில வாரங்கள் அல்லது மாதங்களை கழித்தனர்.

பல நோயாளிகள் இந்த சாதனத்திற்குள் சிக்கியிருப்பதாக உணர்ந்தனர். மேலும், இரும்பு நுரையீரலுக்குள் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதும் மருத்துவர்களுக்கு கடினமாக இருந்தது. ஆனால் இந்த கண்டுபிடிப்பு பல எதிர்கால மருத்துவ முன்னேற்றங்களுக்கு அடித்தளம் அமைத்தது.