தென் ஆப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய இந்திய வம்சாவளி வீரர் ...!
ஒருநாள் கிரிக்கெட்டில், எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி சதம் விளாசி அயர்லாந்து ஆல்ரவுண்டர் சிமி சாதனைப் படைத்துள்ளார்.
அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ஆல்ரவுண்டர் சிமி சிங் இந்தியாவில் பிறந்து அயர்லாந்து நாட்டில் குடிபெயர்ந்தவர் ஆவார். இவர் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணிக்காக எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி சதம் விளாசினார்.
இதற்கு முன்னால் ஒருநாள் கிரிக்கெட்டில் 8வது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய எந்தவொரு பேட்ஸ்மேனும் சதம் கண்டதில்லை. இதன் மூலம் சிமி சிங் புதிய சாதனை படைத்துள்ளார். எனினும் இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.