கடைசி ஓவரில் 36 ரன்கள் : கெத்து காட்டிய அயர்லாந்து பேட்ஸ்மேன்

Irish batsman John Glass
By Petchi Avudaiappan Jul 18, 2021 12:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 அயர்லாந்தில் கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்சர்கள் விளாசி பேட்ஸ்மேன் சாதனைப் படைத்துள்ளார்.

வடக்கு அயர்லாந்து கிளப் அணிகளுக்கு இடையில் எல்.வி.எஸ். டி20 தொடர் நடைபெற்று வருகிறது.இதன் இறுதிப் போட்டியில் கிரேகாக்- பாலிமேனா அணிகள் மோதின. சொந்த மைதானத்தில் கிரேகாக் அணி முதலில் பேட்டிங் செய்து 40 ஓவர் போட்டியில் 147 ரன்கள் அடித்தது. இலக்கை துரத்திய பாலிமேனா அணி 39 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களே அடிக்க முடிந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 35 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை பாலிமேனா அணியின் கேப்டன் எதிர்கொண்டார். கடைசி ஓவரில் 35 ரன்கள் அடிப்பது மிகவும் கடினம். அதனால் சாம்பியன் கோப்பை நமக்குதான் என கிரேகாக் அணியின் வீரர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆனால் பாலிமேனா கேப்டன் ஜான் கிளாஸ் கடைசி ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெறவைத்தார். அவரே ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.