இர்பான், மதன் கெளரி, TTF வாசன் சொத்து மதிப்பு என்ன? யூடியூபில் எவ்வளவுதான் சம்பாதிக்க முடியும்!
தமிழ் யூடியூபர்களில் இர்பான், மதன் கெளரி, TTF வாசன் பிரபலமாக உள்ளனர்.
யூடியூப்
ஒவ்வொரு யூடியூபர் வருமானமும் அதன் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை, எத்தனை பேர் பார்க்கிறார்கள், எவ்வளவு பேர் பார்கிறார்கள், எந்த வாடிக்கையாளர் (நகரம்,கிராமம், பெரு நகரம், வெளிநாடு) என்ற பல காரணிகள் அடிப்படையில் வருமானம் மாறுப்படும்.
1 லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட ஒரு யூடியூப் சேனலுக்கு 1.98 லட்சம் ரூபாய் முதல் 3.29 லட்சம் ரூபாய் வரையில் யூடியூப் வாயிலாக சம்பாதிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் 1 லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட ஒரு யூடியூப் சேனலில் பல்வேறு பொருட்களையும்,
வருமானம்
பிராண்டகளையும் ப்ரோமோட் செய்வதன் மூலம் கூடுதலான வருமானத்தை பெற முடியும். யூடியூப் நிர்வாகம் சமீபத்தில் 12 மாதத்தில் 1000 சப்ஸ்கிரைபர் மற்றும் 4000 மணிநேரம் பார்வை இருந்தால் மட்டும் போதும் என அறிவித்துள்ளது. இந்த தகுதியை பூர்த்தி செய்தாலே ஒரு யூடியூப் சேனலில் போடப்படும் வீடியோவுக்கு வருமானம் பெற முடியும்.
வெவ்வேறு நாடுகளிலிருந்தும் பிராந்தியங்களிலிருந்தும் பார்வையாளர்கள் வருவதால், ஒரு பார்வைக்கான ஊதியத்தின் சரியான அளவைக் கணக்கிட முடியாது. YouTube சராசரியாக ஒரு பார்வைக்கு ₹0.23 முதல் ₹0.39 வரை செலுத்துகிறது.
10,000 பார்வைகளைப் பெற்று ₹7,608 சம்பாதிக்கலாம். இந்தியாவில் முன்னணி யூடியூபர்களில் சிலர் ஆண்டுக்கு ₹15.2 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார்கள். அந்த வகையில் பிரபல தமிழ் யூடியூபர்களான இர்பான், மதன் கெளரி, TTF வாசன் போன்றவர்கள் மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.