கோலி, ரோஹித் கிடையாது - அயர்லாந்து வீரர் படைத்த அபார சாதனை!

Cricket Ireland Cricket Team Sports
By Jiyath Mar 16, 2024 10:52 AM GMT
Report

டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பால் ஸ்டிர்லிங் படைத்துள்ளார்

பால் ஸ்டிர்லிங்

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்தும், ஓருநாள் போட்டியை ஆப்கானிஸ்தானுக்கு வென்றது.

கோலி, ரோஹித் கிடையாது - அயர்லாந்து வீரர் படைத்த அபார சாதனை! | Irelands Paul Stirling Becomes 1St Cricketer

இதனையடுத்து நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 பவுண்டரிகள் உட்பட 25 ரன்கள் அடித்தார்.

சாதனை 

இந்த 2 பவுண்டரிகளையும் சேர்த்து இதுவரை 401 பவுண்டரிகளை அவர் டி20 போட்டிகளில் அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

கோலி, ரோஹித் கிடையாது - அயர்லாந்து வீரர் படைத்த அபார சாதனை! | Irelands Paul Stirling Becomes 1St Cricketer

அந்த வரிசையில் தற்போது பால் ஸ்டிர்லிங் - 401 பவுண்டரிகள், பாபர் ஆசம் - 395 பவுண்டரிகள், விராட் கோலி - 361 பவுண்டரிகள், ரோகித் சர்மா - 359 பவுண்டரிகள், டேவிட் வார்னர் - 320 பவுண்டரிகள் ஆகிய இடங்களை பிடித்துள்ளனர்.