அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 - தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

southafrica ireland first match
By Anupriyamkumaresan Jul 20, 2021 02:55 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விளையாட்டு
Report

அயர்லாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 - தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி! | Ireland Vs Southafrica First Match Southafrica Win

இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதில் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165- ரன்கள் குவித்தது.

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 - தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி! | Ireland Vs Southafrica First Match Southafrica Win

166- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132- ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2- வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி நடக்கிறது.