Wow... T20 உலகக் கோப்பை - 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி...!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்று நடைபெற்ற போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி பெற்றது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து
இன்று மெல்போர்னில் நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. ஆனால், இப்போட்டி மழையால் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
மழை விட்ட பிறகு 45 நிமிட நேரம் தாமதமாக இப்போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து கேப்டன் ஜாஸ்பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, அயர்லாந்து கேப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இப்போட்டியின் முடிவில் அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன்னில் 158 ரன் எடுத்தது.
இதன் பின்பு, 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. இப்போட்டியின் இறுதியில், இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.