இருக்கையை தேடி உணவு வர வேண்டுமா? இதோ இலவச எண் - அதிரடி அறிவிப்பால் ரயில் பயணிகள் உற்சாகம்

Twitter Indian Railways Indian Railway Catering and Tourism Corporation
By Anupriyamkumaresan Sep 25, 2021 11:42 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

கொரோனா பேரிடர் காரணமாக பல்வேறு வசதிகளை நிறுத்தி வைத்திருந்த இந்திய ரயில்வே, தற்போது பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்திய ரயில்வே வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பால், ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. இது குறித்து இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலாக்கழகம் இருக்கும் போது இனி ரயில் பயணித்தின் போது யாருமே பசியோடு செல்ல வேண்டியாது இருக்காது என்றும், நீண்ட பயணமோ, குறுகிய பயணமோ, உங்கள் ரயில் பயணத்தின் போது மிக எளிதாகவே உணவை ஆர்டர் செய்து பெற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இருக்கையை தேடி உணவு வர வேண்டுமா? இதோ இலவச எண் - அதிரடி அறிவிப்பால் ரயில் பயணிகள் உற்சாகம் | Irctc Twitter Railway Food Come To Seat

மேலும், ரயில் பயணிகள் ரயில்வேயின் இணையதளத்தை பயன்படுத்தி இந்த சேவையை அனுகலாம் என்றும் இதன் மூலம் அவர்கள் இருக்கைக்கே உணவு வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.