அள்ளிக் கொடுத்த IRCTC..!!கம்மி விலையில் இனி தாய்லாந்தை சுத்தலாம்..!!
இந்தியாவின் ரயில்வே நிர்வாகமான IRCTC சுற்றுலாப்பயணிகளுக்காக பல சர்வதேச அதிரடி பேக்கேஜ்ஜுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
IRCTC திட்டம்
இந்தியாவில் செயலாற்றி வரும் IRCTC மக்களை கவருவதற்காக பல அதிரடி திட்டங்களை கம்மி விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிட டூர் பேக்கேஜ்களையும் அறிமுகப்படுத்தி வந்த IRCTC தற்போது சர்வதேச சுற்றுலாத்தலங்களையும் பார்வையிட திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
அதில் ஒரு பங்காக தாய்லாந்திற்குச் செல்ல ஒரு அற்புதமான டூர் பேக்கேஜைக் IRCTC அறிமுகம் செய்துள்ளது. தாய்லாந்தின் நாட்டின் முக்கிய இடங்களான பாங்காக் மற்றும் பட்டாயா நகரங்களை நாம் இந்த திட்டத்தின் வாயிலாக சுற்றிப்பார்க்கலாம்.
6 Days & 5 Nights
இந்த பெயர் பேக்கேஜ் பெயர் ஸ்பார்க்லிங் தாய்லாந்து எக்ஸ் லக்னோ(Sparkling thailand ex lucknow) ஆகும். இந்த டூர் பேக்கேஜில் 6 நாட்கள் மற்றும் 5 இரவுகள் பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. டிசம்பர் 8, 2023 அன்று லக்னோவில் துவங்கிப்படுகிறது இந்த டூர் பேக்கேஜ்.
இதில், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு போன்ற அனைத்தும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதில் தனிநபர் கட்டணம் என்றால் ரூ.69,800 செலுத்த வேண்டும்.இருவராக பயணம் செய்தால் ஒரு நபருக்கு ரூ.60,300 கட்டணம். மூன்று பேர் சேர்ந்து பயணித்தால் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.60,300 ஆகும்.