IRCTC: ஜாலியா துபாய் சுற்றுலா - எவ்வளவு கட்டணம் தெரியுமா?
IRCTC-யின் சுற்றுலாவிற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
துபாய் சுற்றுலா
டெல்லி பயணிகள் "டாஸ்லிங் துபாய் எக்ஸ் டெல்லி" என்ற தொகுப்பைத் தேர்வு செய்யலாம். 5 இரவுகள் மற்றும் 6 பகல்கள் கொண்ட இந்தச் சுற்றுலா தொகுப்பின் விலை ரூ.92,000.

ஜனவரி 22 அன்று தொடங்கும் இந்தப் பயணத் திட்டத்தில் புர்ஜ் கலீஃபா, மிராக்கிள் கார்டன், தோவ் குரூஸ் எனப்படும் படகு சவாரி, பெல்லி நடனத்துடன் கூடிய பிரம்மாண்டமான இரவு விருந்து, ஒரு இந்துக் கோயில் மற்றும் அபுதாபியின் பல்வேறு இடங்களைச் சுற்றி பார்க்கலாம்.
பெங்களூரு பயணிகள் ரூ.96,850 முதல் தொடங்கும் "துபாய்-அபுதாபி எக்ஸ் பெங்களூரு" சுற்றுலா தொகுப்பை முன்பதிவு செய்யலாம். 4 இரவுகள் மற்றும் 5 பகல்களை கொண்ட இந்தச் சுற்றுலா தொகுப்பில், இரண்டு நகரங்களிலும் உள்ள முக்கிய இடங்களை உள்ளடக்கியது.

ஹைதராபாத்திலிருந்து செல்பவர்களுக்காக, ஐஆர்சிடிசி துபாய் மற்றும் அபுதாபி சுற்றுலாத் தொகுப்பை ரூ.1.12 லட்சம் விலையில் வழங்குகிறது. 4 இரவுகள் மற்றும் 5 பகல்களைக் கொண்ட இந்த சுற்றுலா தொகுப்பில் விமானப் பயணச் சீட்டுகள் அடங்கும். மேலும், இந்தச் சுற்றுலா இரண்டு நகரங்களிலும் உள்ள முக்கிய இடங்களைப் பார்வையிடுவதை உள்ளடக்கியது.
கொச்சியிலிருந்து, ஐஆர்சிடிசி "டாஸ்லிங் துபாய் வித் அபுதாபி" என்ற தொகுப்பை 4 இரவுகள் மற்றும் 5 பகல்களுக்கு வழங்குகிறது. இதன் விலை ரூ.96,700 ஆகும். ஜனவரி 22 அன்று புறப்படும் இந்தச் சுற்றுலாவில் புர்ஜ் கலீஃபா, துபாய் மால், மெரினா தோவ் குரூஸ், பாலைவனச் சவாரி மற்றும் அபுதாபியில் உள்ள பெரிய மசூதிக்கு செல்வது ஆகியவை அடங்கும்.