நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘இரவின் நிழல்’ டீசர் வெளியானது
தமிழ் திரையுலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.
கடந்த 2019-ம் ஆண்டு இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ படம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து தேசிய விருதை பெற்று சாதனை படைத்தது.
வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
96 நிமிடங்கள் ஓடும் இப்படம், ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது.
இந்நிலையில் நடிகர் பார்த்திபனே இயக்கி நடித்துள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.