அந்த காட்சியில் ஏன் நடித்தேன் - விளக்கம் கொடுத்த பவி டீச்சர்
பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தது குறித்து பிரிகிடா விளக்கமளித்துள்ளார்.
இரவின் நிழல்
ஆஹா கல்யாணம் என்ற வெப்சீரிஸில் ‘பவி டீச்சர்’ என்ற கதாப்பாத்திரத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுவதற்காக சென்ற அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவில் புதுப்புது முயற்சிகள் செய்து வெற்றி கண்ட இயக்குனர் பார்த்திபன். அவரது இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் இரவின் நிழல் படம் அனைவரையும் வியக்கவைத்துள்ளது.
ஏன் அந்த காட்சியில் நடித்தேன்
இது உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாகும். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். அதில் பிரிகிடா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்துள்ளார். அவ்வாறு நடித்தது ஏன் என்பது குறித்து தற்போது ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
இதைப் பார்த்திபன் சார் என்னிடம் சொன்னபோது, இதை எப்படி பெற்றோரிடம் சொல்லி புரிய வைப்பது என்பது எனக்கு சற்று நெருடலாக இருந்தது. சேலை அணிந்து சென்றாலே சரியாக இருக்கிறதா? என பல முறை சரி செய்யும் பெண் தான் நான்.
பார்த்திபன் சார் புரிய வைத்தார்
ஆனால், அந்த கதாபாத்திரம் மிகவும் புனிதமானது. அதற்கு அப்படியொரு விஷயம் நடக்கும் போது, அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரிய வைத்தார்.
இதையடுத்து நானும், பார்த்திபன் சாரும் எடுத்துக்கூறியதும், எனது பெற்றோர் அவ்வாறு நடிக்க சம்மதித்தனர். அதன்பின்னர் தான் அந்தக் காட்சியை எடுத்து முடித்தோம்.
படத்தில் பார்க்கும் போது அது கவர்ச்சியாக தெரியாது, பலரையும் அது ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அதில் உள்ள புனிதம் மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளார்.