நிரூபர் கேட்ட ஒற்றை கேள்வியால் கோபமான கோஹ்லி: அப்படி என்ன கேட்டார் தெரியுமா?
இங்கிலாந்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது கோஹ்லி கோபமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று மூன்றாவது டெஸ்ட் நடந்து வருகிறது.
இதனிடையே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நிருபர் ஒருவர், இங்கிலாந்தில் முக்கிய வீரர்கள் இல்லாத இந்த தருணத்தில் அந்த அணியை வெல்வது சுலபம்தான் இல்லையா? எனக் கேட்டார்.
இதனால் கோபமடைந்த கோஹ்லி, முக்கிய வீரர்கள் எந்த அணியில் இருந்தாலும் எங்களால் வீழ்த்த முடியும்.
எதிரணியினர் பலவீனமாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை, சிறப்பாக விளையாடும் இந்திய அணியை குறைத்து மதிப்பிடும்படி கேள்வி கேட்டது சரியானது அல்ல என தெரிவித்தார்.
மேலும் தற்போதை வெற்றி கூட்டணி தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றும், வீரர்கள் உற்சாகத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.