பாக்தாத் கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் தொட்டி வெடித்ததில் 27 பலி

people blast cylinder oxygen iraq
By Praveen Apr 25, 2021 10:30 AM GMT
Report

பாக்தாத் மருத்துவமனையில் ஆக்சிஜன் தொட்டி வெடித்ததில் 27 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் தலைநகர் தென்கிழக்கு பாக்தாத்தில் உள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் நேற்றைய தினத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் உயிரிழந்தனர் மேலும் 46 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்ட இடமானது கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வரும் கொரோனா நோயாளிகளின் தங்குமிடமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தீ விபத்தானது அங்கிருந்த ஆக்சிஜன் தொட்டி வெடித்ததில் ஏற்பட்ட விபத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு தீ விபத்து நடந்த சமயத்தில் அருகில் இருந்த ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து மக்களை மீட்டனர்.

இதுகுறித்து ஈராக் சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைவர் கூறுகையில் ,

நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு நியமிக்கப்பட்ட தரையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 120 பேரில் 90 பேர் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஈராக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,025,288 கடந்துள்ளது,இதுவரை 15,217 உயிரிழப்புகளை சந்தித்துள்ளது 897,966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

முன்னதாக ஈராக்கில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி உள்பட பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.