ஈராக்கில் குண்டுமழை பொழிந்த அமெரிக்க போர் விமானங்கள்

United States syria biden
By Jon Feb 28, 2021 12:25 PM GMT
Report

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுப்பெற்ற போராளிகளின் தளங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து அழித்துள்ளன. சமீபத்தில் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அாமெரிக்க பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின் பேரிலே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், போராளி குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த Kata'ib Hezbollah மற்றும் Kata'ib Sayyid al-Shuhada உள்ளிட்ட பல தளங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பைடனின் உத்தரவின் பேரில், அமெரிக்க இராணுவப் படைகள் இன்று மாலை கிழக்கு சிரியாவில் உள்ள குழுக்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியது என தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் ஆயுதங்களை ஏந்திய மூன்று லொறிகள் அழிக்கப்பட்டன, பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.

குறைந்தது 17 போராளிகள் கொல்லப்பட்டனர் என்று மனித உரிமைகளுக்கான இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சிரிய கண்காணிப்பு குழுவின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் கூறினார்.