இலங்கையை தொடர்ந்து ஈரானிலும் வெடித்தது மக்கள் கிளர்ச்சி - ஒருவர் மரணம்

By Petchi Avudaiappan May 16, 2022 05:51 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

இலங்கையைப் போல ஈரானிலும் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 ஈரானில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் போது மன்னர் முகமது ரேசா ஷா பகலவியின் ஆட்சி அகற்றப்பட்டது. அந்த புரட்சியைத் தொடர்ந்து மதத் தலைவர் கொமேனி தலைமையிலான அரசு அமைந்தது. ஈரானைப் பொறுத்தவரை அமெரிக்காவை கடுமையாக எதிர்த்து சர்வதேச அரசியல் களத்தில் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. 

ஈரானில் கடந்த சில நாட்களாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. ஈரானின் அத்தனை நகரங்களிலும் மக்கள் போராட்டம் வெடித்திருப்பதாக . சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. ஆனால் இந்த வீடியோக்களின் உண்மை தன்மை என்ன என்பது தெரியவில்லை.

மேலும் இத்தனை ஆண்டுகாலம் தங்களது போற்றுதலுக்குரிய மத தலைவராக மதிக்கப்பட்ட கொமேனியின் படங்களையும் தீயிட்டு போராட்டக்காரர்கள் எரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.