திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் - பிரபல நடிகையின் கணவர் மீது பகீர் புகார்!

Sexual harassment Bollywood Crime
By Sumathi Feb 13, 2023 08:00 AM GMT
Report

திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றியதாக நடிகை ராக்கி சாவந்தின் கணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 ராக்கி சாவந்த் கணவர் 

பாலிவுட் திரையுலகில் ட்ராமா குயின் என்று அழைக்கப்படுபவர் ராக்கி சாவந்த். 2006-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் திரையுலகில் பிரபலமானார். நடிப்பு, நடனம், மாடலிங் என்று இவரது பயணம் சென்று கொண்டிருக்க, அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் அவர் சிக்குவது வழக்கம்.

திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் - பிரபல நடிகையின் கணவர் மீது பகீர் புகார்! | Iranian Woman Raped Case Rakhi Sawants Husband

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த திருமணத்தை முறித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அதில் துரானி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பாலியல் புகார் 

இந்நிலையில் ராக்கி சாவந்தின் கணவர் அதில் துரானி மீது மைசூரு வி.வி.புரம் போலீசில் ஈரான் நாட்டு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், நான் மைசூருவில் உள்ள மருத்துவ கல்லூரியில் தங்கி மருத்துவம் படித்து வருகிறேன். எனக்கும் அதில் துரானிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தோம்.

என்னை திருமணம் செய்துகொள்வதாக அவர் ஆசைவார்த்தை கூறி என்னுடன் உல்லாசம் அனுபவித்தார். அதன்பிறகு என்னுடன் பழகுவதை நிறுத்திய அவர், என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். திருமணம் செய்ய வலியுறுத்தினால், உல்லாசமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டுகிறார்.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் துரானி மீது கற்பழிப்பு, மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.