ஈரானிய தளபதி மரணத்திற்கு பழிக்குப் பழியாக இளம்பெண் செய்த செயல் - அதிர்ச்சியில் போலீசார்
அமெரிக்காவில் டேட்டிங்கில் ஈடுபட்ட நபரை நள்ளிரவில் ஈரானிய இளம்பெண் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில்நிக்கா நிகவுபின் என்ற 21 வயது இளம்பெண் பிளென்டி ஆஃப் பிஷ் என்ற டேட்டிங் வலைதளம் வழியேஒருவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். இதனையடுத்து ஹெண்டர்சன் நகரில் உள்ள சன்செட் ஸ்டேசன் ஓட்டலில் சந்திப்பது என இருவரும் முடிவு செய்து இருவரும் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து உள்ளனர்.
அன்றைய தினம் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அந்த நபரின் கண்களை துணியால் நிக்கா கட்டியு பின்னர் விளக்குகளையும் அணைத்துள்ளார். பின் ஒரு சில நிமிடங்கள் கழித்து அந்த நபருக்கு கழுத்து பகுதியின் ஓரத்தில் ஏதோ வலி ஏற்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது என உணர்ந்து கொண்ட அந்த நபர், நிக்காவை தள்ளி விட்டு விட்டு அவசர எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். உடனடியாக ஓட்டல் ஊழியர் ஒருவரிடம் நடந்த விவரங்களை கூறி விட்டு நிக்கா தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் கூறும்போது ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானி கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கவே, நிக்கா அந்த நபரை கத்தியால் குத்தியுள்ளார் என தெரிவித்தனர். ஆனால் நிக்கா கூறும்போது, கிரேவ் டிக்கர் என்ற பாடல் ஒன்றை கேட்டேன். அதன்பின்பே பழிவாங்கும் தூண்டுதல் தனக்குள் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.