ஹிஜாப் விவகாரம் - நட்சத்திர செஸ் வீராங்கனை நாடு கடத்தப்பட்டார்...!
ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் கலந்து கொண்டனதால் ஈரானிய பெண் நாடு கடத்தப்பட்டார்.
மாஷா ஹமினி மரணம்
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததால், இளம்பெண் மாஷா அமினி என்பவர் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தால் கொந்தளித்த ஈரான் பெண்கள் ஹிஜாப்பிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்களையும் ஈரானிய படைகள் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 15,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் இரு இளைஞர்களை ஈரானிய அரசு பொது வெளியில் தூக்கிலிட்டது நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாடு கடத்தப்பட்ட நட்சத்திர வீராங்கனை
ஈரானிய செஸ் வீராங்கனையான சாரா காடெம் என்று அழைக்கப்படும் 24 வயதான சரசதத் கதேமல்ஷாரி, சமீபத்தில் சர்வதேச போட்டியில் ஹிஜாப் அணியாமல் கலந்து கொண்டார்.
அல்மாட்டியில் நடைபெற்ற FIDE உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாரா ஹிஜாப் அணியாமல் போட்டியில் கலந்து கொண்டதால், அந்நாட்டு செஸ் கூட்டமைப்பு கடுமையாக கண்டனம் தெரிவித்தது.
ஹிஜாப் அணியாமல், விளையாடிய பிறகு ஈரான் வீராங்கனை சரசாதத் கதேமல்ஷாரி ஈரான் சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் ஸ்பெனுக்கு செல்லவுள்ளனதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டனர்.
இதனையடுத்து, ஈரான் நாட்டின் தலைசிறந்த செஸ் வீராங்கனை ஈரானுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல், கைது செய்யப்படவுள்ளார்.
இந்நிலையில், தற்போது செஸ் நட்சத்திரம் சராவும், அவரது குடும்பத்தினரும் தெற்கு ஸ்பெயினுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஊடக ஆதாரங்களால் தான் இருக்கும் இடத்தை பகிரப்பட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.