பாலியல் தொழிலில் 17 வயது மனைவி - தலையை வெட்டி தெருவில் நடந்த கொடூரம்!

Attempted Murder Iran Crime
By Sumathi 2 மாதங்கள் முன்

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் கணவன் தெருவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 17 வயது இளம்பெண்

தனது மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கண்டுபிடித்த பிறகு, அவரது தலையை எடுத்து தெருவில் சுற்றிய நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு திருமணமானபோது 12 வயது. அவர் கொல்லப்படும்போது 3 வயது மகன் உடனிருந்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் தொழிலில் 17 வயது மனைவி - தலையை வெட்டி தெருவில் நடந்த கொடூரம்! | Iran Viral Video Of Man With Wife Mortal Remains

ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில் மோனா ஹெய்டாரி என்ற 17 வயது இளம்பெண் சடலமாக கிடந்தார். இதில் அவரது கணவர் மற்றும் மைத்துனரால் கொல்லப்பட்டதாக போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

படுகொலை

அதனைத் தொடர்ந்து, மறைந்திருந்த அவர்களை இரண்டு தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவரான என்சீஹ் கசாலி, இந்த வழக்கு மீது அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு பாராளுமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

பாலியல் தொழிலில் 17 வயது மனைவி - தலையை வெட்டி தெருவில் நடந்த கொடூரம்! | Iran Viral Video Of Man With Wife Mortal Remains

இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து, "இதுபோன்ற சோகத்தை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? மீண்டும் ஒரு பெண்ணடிமை படுகொலை நடக்காத வகையில் நாம் செயல்பட வேண்டும். மோனா தனது அறியாமையால் பாதிக்கப்பட்டவர்.

கோரிக்கை

இந்த குற்றத்திற்கு நாம் அனைவரும் பொறுப்பு” என்று புகழ்பெற்ற பெண்ணிய திரைப்பட தயாரிப்பாளர் தஹ்மினே மிலானி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இச்சமபவத்தை தொடர்ந்து, குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களைச் சீர்திருத்தவும், தற்போது ஈரானில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை 13 ஆக உயர்த்தவும் கோரிக்கைகள் மீண்டும் வலுத்துள்ளன.