'டிரம்பை நிச்சயம் பழிவாங்கியே தீருவோம்':ஈரான் தலைவர் சர்ச்சை டுவீட்

attack usa qasem
By Jon Jan 23, 2021 12:56 PM GMT
Report

டிரம்ப் அவர்களை பழிவாங்கியே தீருவோம் என ஈரான் அதிபர் போட்ட டுவீட்டால் சர்ச்சை கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் அவர்கள் வாஷிங்டனில் பதவியேற்றார். மேலும் கலந்து கொள்வதற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு விடுக்கப்பட்டது. ஆனால் அதனை டிரம்ப் அவர்கள் நிராகரித்தார்.

இந்த நிலவிய அமெரிக்க ராணுவ ஏவுகணைத் தாக்குதல் மூலமாக ஈரான் புரட்சிகர ராணுவப்படைத் தளபதி காசிம் சுலைமானியை பலி வாங்கியது. இதனால் கமேனி நீண்டகாலமாக டொனால்ட் ட்ரம்ப்மீது அதிருப்தியில் உள்ளார். அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல் கருத்துக்களைப் பதிவிடும் வழக்கம் உடையவர் கமேனி. டிரம்பின் தாக்குதலை குறிக்கும் வகையில் டிரம்ப் கோல்ஃப் விளையாடும் கழுகுப்பார்வை கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கமேனி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தில் உருதுவில் சில வரிகள் இருந்தன. பாக்தாத்தில் இருந்த சுலைமானியை தனது உத்தரவின்மூலமாக ஏவுகணை தாக்குதலில் கொலைசெய்த டொனால்ட் டிரம்பை பழிக்குப்பழி வாங்குவது தவிர்க்க இயலாதது. நிச்சயம் பழி வாங்கியே தீருவோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த சர்ச்சைக்குரிய டுவீட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. காசிம் சுலைமானி கொல்லப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில் அவருக்கு அரசு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பேசிய ஈரான் சட்டத்துறை தலைவர் இப்ராஹிம், சுலைமானியின் படுகொலைக்கு காரணமானவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.