சிதைந்த நிலையில் பிஞ்சு குழந்தைகளின் சடலம்: ஒட்டுமொத்த உலகை உலுக்கிய ஒற்றை புகைப்படம்

Iran-Israel War
By Fathima Mar 04, 2026 03:42 AM GMT
Report

ஈரானின் அணு ஆயுத கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய அரபு எமீரகத்தின் சவுதி அரேபியா, குவைத், துபாய் உள்ளிட்ட நகரங்களில் அமெரிக்கா தூதரகங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவி கடுமையான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஒட்டுமொத்த உலகத்தையும் சோகத்தில் மூழ்கடித்தது ஈரானின் ஆரம்ப பள்ளி மீதான தாக்குதல்.

சிதைந்த நிலையில் பிஞ்சு குழந்தைகளின் சடலம்: ஒட்டுமொத்த உலகை உலுக்கிய ஒற்றை புகைப்படம் | Iran Shares Photo Of Pits Dug To Bury 165 Children

தெற்கு ஈரானின் மினாப் நகரில் செயல்பட்டு வந்த ஷஜரே தையேபா பெண்கள் ஆரம்ப பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 165 பேர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதலில் உயிரிழந்த பிஞ்சு குழந்தைகளை புதைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளுடன் வெளியான ஒற்றை புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது.

இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என இஸ்ரேலும், பள்ளிகளை குறிவைக்க மாட்டோம் என அமெரிக்காவும் கூறுகிறது.

சிதைந்த நிலையில் பிஞ்சு குழந்தைகளின் சடலம்: ஒட்டுமொத்த உலகை உலுக்கிய ஒற்றை புகைப்படம் | Iran Shares Photo Of Pits Dug To Bury 165 Children

இப்புகைப்படத்தை பகிர்ந்த ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சர், அமெரிக்க- இஸ்ரேல் குண்டுவீச்சில் ஒரு தொடக்கப்பள்ளியில் கொல்லப்பட்ட 160க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுமிகளுக்கான தோண்டப்பட்ட கல்லறைகள், அவர்களின் உடல்கள் உருக்குலைந்து போயுள்ளனது.

மிஸ்டர் டிரம்ப் வாக்களித்த மீட்பு இப்படித்தான் இருக்கிறது, அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.