எங்கள் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கணும் : ஈரான் வலியுறுத்தல்

Iran US sanctions
By Irumporai Oct 19, 2021 11:56 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும்' என, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. ஆகவே இது தொடர்பான விவகரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன்  பேச்சு வார்த்தை நடத்த   இருந்து அப்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானி முயற்சி செய்தார்.

தற்போது  ஈரானின் புதிய அதிபராக உள்ள  இப்ராஹிம் ரைசியும்  முயன்று வருகிறார் , இந்த நிலையில் ஈரான்  சில விதிமுறைகளுக்கும் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைய அமெரிக்கா தயாராக  இருப்பதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தற்போது தெரிவித்துள்ள கருத்தின் படி , அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் நாங்கள் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நீக்கப்பட வேண்டும். இதில் நாங்கள் தீர்க்கமாக இருக்கிறோம்' என்றார்.