ஈரானில் மாணவிகள் மீது விஷம் வைத்து தாக்குதல் - பயங்கர போராட்டம் வெடித்தது...!

Iran
By Nandhini Mar 05, 2023 01:18 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஈரானில் பள்ளி மாணவிகள் கல்வி கற்க கூடாது என்று விஷம் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.

ஈரானில் மாணவிகள் மீது விஷம் வைத்து தாக்குதல்

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் சமீபத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் பள்ளிச் சிறுமிகளை திடீரென பாதிக்கப்பட்டனர்.

அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது விஷ தாக்குதலுக்கு ஆளான செய்தி வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நோயால் சமீப மாதங்களாக 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு மாணவி சிறுமிகள் லேசான விஷத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரானின் 31 மாகாணங்களில் குறைந்தது 10 மாகாணங்களில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயின்ற மாணவிகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான தாக்குதல்கள் குறித்து வெளிப்படையான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஈரானில் பள்ளி மாணவிகள் கல்வி கற்க கூடாது என்று விஷம் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது. 

iran-poison-attacks-on-schoolgirls-protests