ஹார்மோஸ் நீரிணை வழியே கப்பல்கள் செல்ல வரி?
ஹார்மோஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களுக்கு வரி விதிக்க ஈரான் பரிசீலித்து வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
போர் தொடங்கியது முதல், ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடியுள்ளதால் உலக நாடுகள் பலவும் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் இந்த பாதை வழியே நடைபெறுவதால் இதன் மூடல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரிய அளவில் உயர்ந்து வருகிறது.
ஹார்மோஸ் நீரிணையை திறக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், போர் கப்பல்களை அனுப்புமாறு தனது நட்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்தும் அந்த நாடுகள் கோரிக்கையை ஏற்க வில்லை.
கப்பல்களை அந்த பாதையில் செலுத்த வேண்டாம் என ஈரான் எச்சரித்த நிலையிலும், மீறி சென்ற கப்பல்கள் மீது தாக்குதல்.நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், இயல்பான கப்பல் போக்குவரத்து விரைவில் திரும்புவதற்கு வாய்ப்பில்லை என்று சமீபத்தில் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பான பாதையாக பயன்படுத்த விரும்பினால், நாடுகள் ஈரானுக்கு சுங்கக் கட்டணங்களையும், வரிகளையும் செலுத்தும் வகையிலான ஒரு திட்டத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் முன்னெடுத்து வருகிறோம் என தெஹ்ரான் நாடாளுமன்ற உறுப்பினர் சோமாயே ரஃபீ தெரிவித்துள்ளார்.

ஈரான் ஹார்மோஸ் நீரிணையை ஒரு புவிசார் அரசியல் அழுத்தத்தை உருவாக்கவும், ஒரு மூலோபாய பேரம்பேசும் சக்தியாகவும் பயன்படுத்தி வருகிறது.
சமீபத்தில் தனது நட்பு நாடாக கருதும் நாடுகளின் கப்பல்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அணுகல்களை ஈரான் அந்த பாதையில் வழங்கியது.
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு அந்த பாதையை திறக்க முடியாது என தெரிவித்துள்ளது.
ஹார்மோஸ் நீரிணை வழி செல்லும் கப்பல்களுக்கு வரி விதித்தால், கப்பல் போக்குவரத்து செலவு, எரிசக்தி விலை ஆகியவற்றில் பாரிய மாற்றம் ஏற்படும்.
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் தலைவர் பேச்சு நடத்திய இடத்தை விடுவித்தது சிறிலங்கா இராணுவம் IBC Tamil
Viral Video: இந்த சின்ன வயசுல எம்புட்டு தைரியம்னு பாருங்க... குரங்கை தலைதெறிக்க ஓட வைத்த சிறுவன் Manithan