விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கழன்ற சக்கரம்.., அவசர தரையிறக்கம்
Iran Plane Makes Emergency Landing After Tire Falls Off- ஈரானில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் சக்கரம் கழன்று விழுந்ததால் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
விமானம் அவசர தரையிறக்கம்
ஈரானைச் சேர்ந்த செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், மஷ்ஹத் நகரிலிருந்து கெர்மன்ஷாவுக்கு செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்தது.

இதனால் விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, விமானத்தில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன.
இதையடுத்து விமானம் மஷ்ஹத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
என்ஜின் கோளாறு காரணமாக ஏற்பட்ட அதிர்வில் விமானத்தின் உட்புற மேற்கூரை, விளக்குகள் மற்றும் தலைக்கு மேல் வைக்கப்பட்டிருந்த பேக்குகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
பயணிகள் பத்திரமாக மீட்பு
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில், விமானம் விபத்துக்குள்ளாகும் என அச்சமடைந்த பயணிகள் அலறும் காட்சிகளும், பிரார்த்தனை செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
An aviation incident occurred in Iran involving a Sepehran Airlines Boeing 737-300.
— Ramesh Speaks (@rameshofficial0) September 16, 2026
After a landing gear tire burst post-
takeoff causing engine damage and severe vibrations the plane safely made an emergency landing
No injuries were reported among the 127 passengers. pic.twitter.com/DCYgZykQM5
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு IBC Tamil
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல் IBC Tamil