ஈரானில் பெண்கள் கல்வியை தடுக்க விஷ வாயுவை பரப்பி கொலை முயற்சி... - அதிர்ச்சி தகவல்...!

Iran World
By Nandhini Feb 28, 2023 11:24 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஈரானில் பெண் சிறுமிகள் பள்ளி செல்வதை தடுக்க, மர்ம நபர்கள் சிலர் நச்சு காற்றை பரப்பியதாக ஈரானிய துணை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ள தகவல் நாடெங்கும் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

விஷ வாயுவை பரப்பி கொலை முயற்சி

ஈரானில் பெண் சிறுமிகள் பள்ளி செல்வதை தடுக்க, மர்ம நபர்கள் சிலர் நச்சு காற்றை பரப்பியதாக ஈரானிய துணை அமைச்சர் ஒருவர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஈரானிய துணை அமைச்சர் ஒருவர் கூறுகையில்,

ஈரான் நாட்டின் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் சிறுமிகள் பள்ளி செல்வதை தடுக்க, மர்ம நபர்கள் சிலர் நச்சு காற்றை பரப்பி அவர்களை கொலை செய்ய முயற்சி செய்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு நவம்பரில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான இதுவரை யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

iran-education-minister-poisoning-schoolgirls

தீவிரவாதிகள் சதி திட்டம் -

மேலும், ஈரான் முழுவதும் உள்ள பள்ளிகளில் உயர்நிலைப் பள்ளிப் பெண்களின் விஷத்தை பரப்புவோம் என்று சபதம் செய்து, பெண் கல்வி தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கும் அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை தீவிரவாதிகளின் குழு விநியோகித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 முதல் தற்போது வரை 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விஷ அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.