ஜோ பைடனுக்கு அமைதி தூதுவிடும் ஈரான்: அணுஆயுத ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய கோரிக்கை

america trump usa iran
By Jon Jan 20, 2021 02:48 PM GMT
Report

ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் ஈரான் - அமெரிக்கா மோதல் புதிய உச்சத்தை எட்டியது. ஒபாமா ஆட்சிக் காலத்தில் கையெழுத்தான ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து ஈரான் இராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்க இராணுவம் கொலை செய்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர்பதற்றம் தொற்றிக்கொண்டது. ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பல பொருளாதார தடைகளை விதித்தது.

இந்நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்படுவதால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவிலும் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜோ பைடன் நிர்வாகம் மீண்டும் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணையும் என கணிக்கப்பட்டது.

தற்போது ஈரான் அதிபர் ரௌஹானியே அந்த அழைப்பை விடுத்துள்ளார். அமெரிக்கா மீண்டும் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைய வேண்டும் என்றும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.