9 வயது தான்...குறைக்கப்படும் பெண்களின் திருமண வயது!! வலுக்கும் எதிர்ப்புகள்
ஈராக் நாட்டில் பெண்களின் திருமண வயதை 9'ஆக குறைக்கும் வகையில் சட்டம் ஒன்று அந்நாட்டில் முன்மொழியப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டம்
ஈராக் பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த மசோதாவின் முதல் முறை முன்மொழியப்பட்டுள்ளது. கடும் விமர்சனங்களை இந்த மசோதா பெற்றுள்ளது.
பெண்களின் திருமண வயதை 9 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 15'ஆக குறைக்கப்படுவதாக இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மனித உரிமைகள் மற்றும் பெண்களின் அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்றுள்ளது. தற்போது அந்நாட்டில் திருமண வயது என்பது 18'ஆக இருக்கும் நிலையில், இதுவே தொடரவேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.
எதிர்ப்புகள்
பாராளுமன்றத்தில் இந்த சட்டம் முன்மொழியப்பட்டாலும், குடும்ப விஷயங்களுக்கு மத விதிகளை பின்பற்றலாமா? ;அல்லது சிவில் நீதிமன்றத்தின் சட்டத்தையே பின்பற்றலாமா? என்பதை மக்களே தேர்வு செய்ய அனுமதியும் வழங்கப்படுகிறது.
இது பெண்களின் உரிமை பல சட்ட நகர்வுகளில் குறைத்து விடும் என எதிர்ப்பவர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது வாரிசு உரிமை, விவாகரத்து, குழந்தைகள் காவல் உரிமை போன்றவற்றில் சிக்கலை உண்டாக்கும் என இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.