65 ஆண்டுகளாக குளிக்காத... உலகின் அழுக்கு மனிதன் அமோ ஹாஜி உயிரிழந்தார்...!
உலகின் அழுக்கு மனிதன் அமோ ஹாஜி உயிரிழந்துள்ளார்.
உலகின் அழுக்கு மனிதன் அமோ ஹாஜி
ஈரானைச் சேர்ந்த அமோ ஹாஜி (Amou Haji). இவருக்கு தண்ணீர் என்றாலே அலர்ஜி. கடந்த 65 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்து வந்தார் அமோ ஹாஜி தன்னுடைய 83 வயதில் கூட ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்து வந்தார்.
இத்தனை ஆண்டுகளாக குளிக்காமல் நாற்றத்துடன் இருந்த அமோ ஹாஜியை கிராம மக்கள், கிராமத்திற்கு வெளியே தான் தங்க வைத்தனர்.
இந்த அழுக்கு மனிதரின் உணவுப் பழக்க வழக்கங்களும் வித்தியாசமானதாகவே இருந்தது. இறந்த விலங்குகளின் அழுகிய இறைச்சியைதான் சாப்பிட்டு வந்தார் அமோ ஹாஜி. விலங்குகள் விபத்தில் இறந்திருந்தாலும் சரி, இயற்கை வழியில் இறந்திருந்தாலும் சரி, அது பற்றி அவருக்கு கவலை இல்லை. அசைவ உணவையே விரும்பி சாப்பிட்டு வந்தார்.
அழுகிய உள்நாட்டு கீரைகள் மற்றும் காய்கறி உணவுகளையும் விரும்பி சாப்பிட்டு வந்தார். இவரை உலகின் அழுக்கு மனிதன் என்று அழைக்கப்பட்டார்.

அமோ ஹாஜி உயிரிழந்தார் -
இந்நிலையில், ஈரானைச் சேர்ந்த அமோ ஹாஜி, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர் தன்னுடைய 94 வயதில் உயிரிழந்துள்ளார். உடல் நலக்குறைவு ஏற்படும் என்ற பயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அக்கிராம மக்கள் சிலர் அமோ ஹாஜியை குளிப்பாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.