உடை கட்டுப்பாடு: போராட்டத்திற்கு வெற்றி - அடிபணிந்த ஈரான் அரசு!
உடை கட்டுப்பாட்டு விதியை கண்காணிக்கும் அறநெறி காவல்துறையை ஈரான் அரசு கலைத்துள்ளது.
வலுத்த போராட்டம்
ஈரானில் உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினி என்ற இளம்பெண் அடித்து கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இஸ்லாமிய நாடான இங்கு சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது.

அங்கு 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றவது கண்காணிப்பதற்கு என்று கலாசார காவல்படை என்ற தனி காவல்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது.
பணிந்த அரசு
மூன்று மாத போராட்டத்தில் காவல்துறை அடக்குமுறை காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல பிரபலங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் மக்கள் விடாமல் போராடி வந்தனர். மனித உரிமை அமைப்புகள் போராட்டக்காரர்களுக்கு பெரும் ஆதரவை தந்தன. இந்நிலையில், அதற்கு முதல் வெற்றியாக ஈரான் அரசு 'காஸ்த் எர்ஷாத்'என்ற கலாசார காவல்துறை என்ற பிரிவை கலைத்துள்ளது.