சென்னையில் IQ நிறுவனக் கிளையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

CM Opening Chennai Company MKStalin Branch IQ
By Thahir Apr 18, 2022 04:27 AM GMT
Report

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் IQ நிறுவனக் கிளையை திறந்து வைத்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த IQ நிறுவனம் அதன் கிளையை சென்னையில் தொடங்குகிறது. இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 2500 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Data Science,Data Analytics போன்ற மிக உயரிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சென்னையில் அமையும் நீல்சன் IQ நிறுவனத்தின் உலகளாவிய ஆய்வு மையம் அமைய உள்ளது.

இந்த நிகழ்வில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,தலைமைச்செயலாளர் மற்றும் IQ நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.