புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது

governor bjp Narayanaswamy
By Jon Mar 01, 2021 06:10 PM GMT
Report

புதுச்சேரியில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் கவிழ்ந்தது. இதனிடையே, புதிய அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகளை முழுமையாக வீடியோவில் பதிவு செய்து சட்டசபை செயலர் கவர்னருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

இதன் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, கவர்னர் தமிழிசை அறிக்கை அனுப்புவார் என்றும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அவர் பரிந்துரைப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். அரசிதழில் செய்தி வெளியிடபட்டது.

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும், புதுச்சேரி சட்டப்பேரவைக் கலைக்கப்படும். பிறகு புதுச்சேரியை நிர்வகிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.