தமிழகத்தில் 49 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
transfer
ipstamilnadu
By Irumporai
தமிழகத்தில் 49 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 13 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக வி.பாலகிருஷ்ணன், சென்னை போக்குவரத்து இணை ஆணையராக பிரதிப் குமார்,
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் பெற்றுள்ளனர்.
சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையராக கார்த்திகேயன்.சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக பிரதீப் ஆகியோரும் துணை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.