27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் இன்று 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
செங்கல்பட்டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், திருவண்ணாமலை எஸ்.பியாக பவன் குமார் ரெட்டி, விழுப்புரம் எஸ்.பி.யாக ஸ்ரீனதா, கடலூர் எஸ்.பியாக சக்தி கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன், நாகை எஸ்.பியாக ஜவஹர், மயிலாடுதுறை எஸ்.பியாக சுகுனா சிங்.
நீலகிரி எஸ்.பியாக ஆஷிஷ் ராவத், ஈரோடு எஸ்.பியாக சசி மோகன், திருப்பூர் எஸ்.பியாக சஷாங்க் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.