ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் : தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்து தமிழநாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்
அதன்படி,சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி மாற்றப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை புனித தோமையர் மலை காவல் துணை ஆணையராக தீபக் சிவாச் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி பிரதீப்பும், ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், சென்னை காவல்துறை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக சமாய் சிங் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு உத்தரவு
இந்த மாற்றத்தை பொறுத்த வரை கண்ணன் ஐ.பி.எஸ். மாற்றம் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வடக்கு மண்டல ஐ.ஜி. மாற்றப்பட்டிருப்பதன் பின்னணியில் உளவுத்துறை அறிக்கையும் முக்கிய பங்கு வகிக்கலாம் என கூறப்படுகிறது.
மேற்கு மற்றும் தென் மண்டலத்திலும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் இருக்கக் கூடும் என கூறப்பட்ட நிலையில் அது போல் எதுவும் நடைபெறாதது குறிப்பிடத்தக்கது.