ஏஆர் ரகுமான் இசைக்கச்சேரி...பந்தாடப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள்..!!
இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக ஐபிஎஸ் அதிகார் ஒருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மறக்குமா நெஞ்சம்
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில், இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதன் 5000 ரூபாய்யில் துவங்கி 20 ஆயிரம், 50 ஆயிரம்வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
குறிப்பட்ட அளவை விட அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாலும், சரிவர நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தினாலும் இதற்கு வருகை தந்த பலரும் பல இன்னல்களை சந்தித்தனர். கூட்டநெரிசல், பாலியல் துன்புறுத்தல்கள், நீண்ட நேரமாக காத்திருந்தும் நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்ல முடியாமல் போனது என பல வகையிலும் இது குறித்து ஏமாற்றமடைந்த, பாதிக்கப்பட்ட ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை இணையத்தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அதிகாரிகள்
இந்த இசைநிகழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாகவும், முதல்வரின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதன் காரணமாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்நிகழ்ச்சியின் குளறுபடிகளின் காரணமாக பள்ளிக்கரணையின் துணை ஆணையர் ஐபிஎஸ் தீபா சத்யன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதே போல, சென்னையில் பாஜகவினர் நேற்று நடத்திய போராட்டத்தின் காரணமாக அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை முன்னிட்டு சென்னை கிழக்கு இணை ஆணையர் தீஷா மிட்டல்'லும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.