ராஜஸ்தானுக்கு 189 ரன்கள் இலக்கு: தட்டி தூக்குமா சி.எ.ஸ்.கே?

CSK IPL IPL2021
By Irumporai Apr 19, 2021 04:15 PM GMT
Report

ஐ.பி.எல் தொடரின் ,12 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .

இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், ஆட்டம் நடைபெற்று வருகிறது

. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெட்வாக் - டு பிளெசிஸ் களமிறங்கினர் .

இதில் ருதுராஜ் கெட்வாக் 13 பந்துகளில் ,10 ரன்களை எடுத்து அவுட்டானார் . அடுத்து களமிறங்கிய மொயின் அலி ,மற்றும் பின் டு பிளெசிஸ் அதிரடி ஆட்டத்தை காட்டினார் .

இவர் 17 பந்துகளில் , 4 பவுண்டரி ,2 சிக்ஸர்களை அடித்து, 33 ரன்களில் வெளியேறினார் .

அடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார் .மொயின் அலி , சுரேஷ் ரெய்னா இருவரும் சிறப்பான விளையாடினர்

. மொயின் அலி 20 பந்துகளில் , 1 பவுண்டரி ,2 சிக்ஸர்களை அடித்து ,26 ரன்களில் ஆட்டமிழந்தார் .

இதன் பிறகு களமிறங்கிய ராயுடு 3 சிக்ஸர்களை அடித்து ,27 ரன்னில் அவுட் ஆனார் . இதை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் 20 பந்துகளில் , 1 பவுண்டரி ,1 சிக்ஸரை அடித்து 26 ரன்களில் வெளியேறினார்

அதனை தொடர்ந்து களமிறங்கிய தோனி 2 பவுண்டரிகளை ஓடவிட்டு 17 ரன்கள் எடுத்து சேதன் சகாரியா பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது .

ராஜஸ்தான் அணி தரப்பில் சேட்டன் சக்கரியா 3 விக்கெட், ரஹ்மான் 1, மோரிஸ் 2, ராகுல் டிவடியா 1 விக்கெட் வீழ்த்தினர்.

189 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.