IPL 2022: பெங்களூரு அணியின் புதிய கேப்டன் டூ பிளெஸ்சிஸ் ?

FafduPlessis RoyalChallengersBangalore IPL2022 RCBFafduPlessis
By Thahir Mar 08, 2022 04:07 PM GMT
Report

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வாரத்தில் தொடங்க உள்ளது. மார்ச் 26ஆம் தேதி தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.

மார்ச் 26ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதனிடையே பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் புதிய கேப்டன் யார், என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

IPL 2022: பெங்களூரு அணியின் புதிய கேப்டன் டூ பிளெஸ்சிஸ் ? | Ipl2022 Royal Challengers Bangalore Faf Du Plessis

பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அணி நிர்வாகம் மார்ச் 12ஆம் தேதி அறிவிக்கிறது. இந்நிலையில் பெங்களூரு அணியின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டூ பிளெஸ்சிஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் எழுந்துள்ளது.