இனி எப்போதும் நாம் தான் சாம்பியன்..!வீரர்களை தயார்படுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

Thahir
in கிரிக்கெட்Report this article
கடந்த 2008ம் ஆண்டு முதல் வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் போட்டியில் மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.
கடந்த வருடம் நடந்த போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றது.இதையடுத்து இந்த வருடம் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த அணிகள் வீரர்களை எடுப்பதற்காக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் மாதம் இறுதியில் நடைபெறும் என ஐபிஎல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான தோனி,ஜடேஜா,ப்ராவோ போன்ற அனைத்து வீரர்களுக்குமான பயிற்சி சூரத் மைதானத்தில் நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் நடப்பதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பே பயிற்சி முகாமை நடத்தும் சென்னை அணி,தற்போது சில வாரங்களுக்கு முன் பயிற்சியை துவங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் அணியில் உள்ள முக்கிய வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்காக விளையாடி வருவதால் சென்னை அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
