முதல் வெற்றியை மனைவிக்காக அர்ப்பணிக்கிறேன் - சென்னை அணி கேப்டன் ஜடேஜா..!

RavindraJadeja IPL2022 CSKVsRCB RCBVsCSK
By Thahir Apr 13, 2022 04:31 AM GMT
Report

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரூ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக உத்தப்பா 88 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.ஷிவம் துபே 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 216 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரூ அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இந்நிலையில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. 4 முறை தோல்விக்கு பிறகு முதல் முறையாக சென்னை அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.

இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணி கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஒரு கேப்டனாக பெரும் முதல் வெற்றி எப்போதும் சிறப்பானது.

இந்த வெற்றியை என் மனைவிக்கு அர்பணிக்கிறேன் என்றார்.தொடர் தோல்விக்கு பின் மீண்டும் மீண்டு வந்துள்ளோம்.

நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் ஒவ்வொரு விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்ச்சிக்கிறேன் என்றார்.