போய் வாடா..என் பொலி காட்டு ராசா : ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகும் விராட் கோலி

Irumporai
in கிரிக்கெட்Report this article
கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் இன்று துபாயில் மீண்டும் தொடங்கியுள்ளது, ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நடப்பு தொடருக்கு பின் விலக உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள வீடியோ பதிவில் :
இத்தனை ஆண்டுகள் ஆர்சிபி அணியின் கேப்டனாக பல திறமையான வீரர்களை வழி நடத்தி சென்றுள்ளேன். இத்தனை நாட்கள் எனக்கு உறுதுணையாக இருந்த ஆர்சிபி வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்.
Virat Kohli to step down from RCB captaincy after #IPL2021
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 19, 2021
“This will be my last IPL as captain of RCB. I’ll continue to be an RCB player till I play my last IPL game. I thank all the RCB fans for believing in me and supporting me.”: Virat Kohli#PlayBold #WeAreChallengers pic.twitter.com/QSIdCT8QQM
இந்த முடிவு எடுக்க சற்று கடினமாக தான் இருந்தது. எனினும் அணியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். எனினும் நான் முன்பாக கூறியது போல் எப்போதும் ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடுவேன்.
என்னுடைய ஓய்வு வரை ஆர்சிபி அணிக்கு மட்டுமே விளையாடுவேன் எனக் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் விராட் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது ஐ.பி. எல் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளது ஆர்சிபி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
