Thursday, Jun 19, 2025

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் "த்ரில்" வெற்றி

cricket ipl2021 rajasthanroyal delhicapitals
By Praveen 4 years ago
Report

ஐபிஎல் போட்டியில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 7-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீ ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.

2வது ஓவரில் ப்ரித்வீ ஷா(2 ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேற, ஷிகர் தவான்(9 ரன்கள்) 4வது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 8 ரன்கள் எடுத்த நிலையில், பவுல்ட் ஆனார். ராஜஸ்தான் பந்துவீச்சாளர் உனட்கட் பந்துவீச்சில் டெல்லியின் 3 தொடக்க விக்கெட்டுகள் சரிந்தன.

இதனால் அணி சற்று தடுமாறிய நிலையில் ரிஷப் பண்ட் நிதானமாக ஆடினார். மார்கஸ் ஸ்டோய்னிஸ்(0) ரன் ஏதுமின்றி கேட்ச் கொடுத்து வெளியேறிய நிலையில், லலித் யாதவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 9 பவுண்டரிகளை பறக்கவிட்டு 32 ரன்களில் 51 ரன்கள் சேர்த்தார்.

இது தவிர டெல்லி அணியில் அதிகபட்சமாக லலித் யாதவ் 20 ரன்கள், டாம் கர்ரன் 21 ரன்களும் எடுத்து அவுட்டாகி வெளியேறினர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணியில் உனட்கட் 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிஜுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மாரிஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து தற்போது 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. சீரான இடைவெளியில் ராஜஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்தது.

மறுமுனையில் நிலைத்துநின்று ஆடிய மில்லர் 62 ரன்களில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களத்தில் நின்ற மோரிஸ் ரபடாவின் 19வது ஓவரில் 2 சிக்ஸர் விளாச அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என கொண்டுவந்தார்.

20வது ஓவரிலும் டாம் குர்ரான் வீசிய பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இறுதியில் 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி 150 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் டெல்லி அணி தனது முதல் தோல்வியும் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியும் பதிவு செய்தது.