என்னதான் சார் ஆச்சு .. ராஜஸ்தான் அணிக்கு .. பட்லரும் இல்லை: இன்னும் எத்தனை வீரர்களை இழக்கப் போகிறது!

ipl2021 rajasthanroyals josbuttler
By Irumporai Aug 21, 2021 04:56 PM GMT
Report

ஐபிஎல் 14-ம் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர் விலகியுள்ளார்.ஐபிஎல் 14-ம் சீசனின் முதல் பாதி இந்தியாவில் நடைபெற்றது. அப்போது கொரோனா பாதிப்பு அதிகரித்தன் காரணமாக பாதியிலேயே தடைபட்டது.

இந்த நிலையில் ஐ.பி.எல் தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிரபல ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் தம்பதி இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி இருப்பதால் இரண்டாம் பகுதி ஐபிஎல் போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார்.

அவருக்குப் பதில் மாற்று வீரராக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் கிளென் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார்.

மேலும், முக்கிய ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார்

இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் அணியின் மற்றுமொரு முக்கிய வீரர் பட்லரும் விலகியிருப்பது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மிகப் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது .