சவால்களுடன் இருக்கும் சி.எஸ்.கே : களமிறங்கிய கடைக்குட்டி சிங்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்-ரௌண்டர் சாம் கரன் ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்துள்ளதாக csk அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ரத்தான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, சேத்தேஷ்வர் புஜாரா மற்றும் மொயீன் அலி ஆகியோர் கடந்த சனிக்கிழமை துபாய் வந்துள்ளனர்.
இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடிய சாம் கரன் அவர்களுடன் வரவில்லை. இதனால், சாம் கரன் எப்போது வருவார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளார்.
#KadaikuttySingam is Home ?#WhistlePodu #Yellove ? pic.twitter.com/J19JSEPzIi
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) September 15, 2021
இதனை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அவர் 6 நாட்கள் தனிமையில் இருக்கவுள்ளதால், மும்பை இந்தியன் உடனான முதல் ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார் எனவும் ஏற்கெனவே, பாப் டு பிளெஸ்ஸி காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஏராளமான சவால்கள் உள்ளன.