அடேங்கப்பா...அம்பயர்களுக்கு ஒரு போட்டிக்கு இவ்வளவு சம்பளமா? - ரசிகர்கள் அதிர்ச்சி

TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan Apr 23, 2022 09:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் நடுவர்கள் மீது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது. 

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 36 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அனைத்து போட்டிகளும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது எனலாம். அதேசமயம் ஒரு சில போட்டிகளில் அம்பயர்கள் செய்த தவறால் அணிகளின் வெற்றி பாதிக்கப்பட்டதாக கூறும் வீரர்களின் குமுறலும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். 

இப்படியான சூழலில்  அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.அதன்படி ஐபிஎல் தொடரில் மொத்தம் 2 பிரிவுகளாக அம்பயர்கள் பிரிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் ஐசிசி அம்பயர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.1,98,000 ஊதியமாகவும்,  உறுப்பினர் இல்லாத அம்பயருக்கு ஒரு போட்டிக்கு ரூ.59,000 ஊதியமாகவும் தரப்படுகிறது.

இதனைத் தவிர ஸ்பான்சர்ஷிப் பணம் என தனியாக ஒரு சீசனுக்கு ரூ.7,33,000 தரப்படுகிறது.போட்டியில் சரி, தவறு என எது நடந்தாலும் நடுவர்களின் முடிவே இறுதியாகும். இதனை வீரர்களால் மாற்ற முடியாது என்பதால் அவர்கள் மீது ஒவ்வொரு சீசனிலும் எழும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். \