ஐபிஎல் இறுதிப் போட்டி - குடும்பத்துடன் உற்சாகமாக கண்டு ரசித்த உதயநிதி - புகைப்படங்கள் வைரல்
சென்னையில் நடைபெற்ற சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி போட்டியை தமிழக முதலமைச்சரின் மகனும், திமுக எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் நேரில் மகிழ்ச்சியோடு கண்டு களித்தார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வானது. இதனையடுத்து, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு, 193 என்ற இலக்குடன் ஆட்டத்தை துவங்கிய கொல்கத்தா அணி 10 ஓவரிலிருந்து சரிவை கண்டது.
20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில், ஐபிஎல் இறுதி போட்டியை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தனது குடும்பத்துடன் கண்டு ரசித்தார். அவருடன் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், உதயநிதி மகன் இன்பன் ஆகியோர் உடனிருந்தார்கள். தற்போது, சென்னை அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


