மீண்டும் மோதும் சென்னை vs மும்பை : அனல் பறக்கும் ஐபிஎல் போட்டி தொடர் அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள ஆட்டங்கள் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.
செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் தற்போது போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 19 ஆம் தேதி நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதுவரை நடைபெறுள்ள போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் டாப் நான்கு இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Optical illusion: குட்டீஸ் உங்கள் கண்களை சோதிக்கலாம்...இதில் வாத்துக் குஞ்சு எங்கே மறைந்துள்ளது? Manithan
